Ostan Stars - Thalai Nimira seithare

por SpotLyrics ·

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்
கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்

நம் கர்த்தர் நல்லவரே - 2

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே


சிலுவையில் எந்தன் சிறுமையை
சிதைத்திட்டார் இராஜனே
வெறுமையை வேரோடு அறுத்திட்டார்
வெற்றியின் தேவனே
கைகளில் பாய்ந்த ஆணியால்
என் கரம் பிடித்தாரே
இரத்தம் பாய்ந்த தம் காலினால்
என்னை நடக்க செய்தாரே

நம் கர்த்தர் நல்லவரே-2


குகைதனில் ஒளிந்து கிடந்தேனே
அரண்மனை தந்தாரே
வெட்கத்தை அவர் மாற்றினார்
நம்பினேன் விடுவித்தார்
எதிரிகள் முன் உயர்த்தினார்
என் தலையை நிமிர செய்தார்
உத்தமம் அவர் வார்த்தைகள்
செய்கைகள் சத்தியம்

நம் கர்த்தர் நல்லவரே - 2

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே

கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்
கிருபையால் எல்லாம் அருளினார்
கிருபையால் என்னை உயர்த்தினார்

நம் கர்த்தர் நல்லவரே - 2

தலை நிமிர செய்தார்
என்னை உயர்த்திவிட்டார்
இனி நான் கலங்குவதில்லையே
பெலன் அடைய செய்தார்
என்னை மகிழ செய்தார்
இனி என்றும் பயமெனக்கில்லையே