Ostan Stars - Anbu Oliyadhu

por SpotLyrics ·

மனுஷர் பாஷை பேசினாலும்
தூதர் பாஷை பேசினாலும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே...

சத்தமிடும் வெண்கலமாய்
ஓசையிடும் கைத்தாளமாய்
வாழுகின்ற வாழ்க்கைக்கு
அர்த்தம் இல்லையே...

தீர்க்கமான தரிசனங்கள்
ஆழமான இரகசியங்கள்
அன்பு இல்லா காரணத்தால்
அற்பமாகுமே...

அறிவு கலந்த வார்த்தைகளும்
மலை பெயர்க்கும் விசுவாசமும்
அன்பு எனக்கு இல்லாவிட்டால்
அர்த்தம் இல்லையே...

அன்பு ஒழியாது என்றும் அழியாது
அன்பு குறையாது என்றும் நிறைவானது
அன்பு அசையாது என்றும் அணையாது
அன்பு பிரிக்காது என்றும் ஜெயமானது

நேசருடைய சத்தம்
ஒப்பில்லாத சத்தம்
ஆண்டவரின் சத்தம்
எங்க ஆராதனை சத்தம்