Ostan Stars - 13. Enga poven Naan

por SpotLyrics ·

எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை

ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு
அன்பு காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்
தயவு காட்டுமே
கிருபை தாருமே

1.உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே
அதை எழுத முடியாதே

உந்தன் அன்பை உணராமல்
நாங்கள் செய்த தவறுகள்
எண்ணிலடங்காதே
அதை எழுத முடியாதே

ஆனாலும் மன்னித்தீர் மன்னித்தீர்
தயவாய் என்னை மன்னித்தீர்
ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு
அன்பு காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்
தயவு காட்டுமே
கிருபை தாருமே

2.எம் கண்கள் உம்மைத் தேடுதே
கரங்கள் கூப்பி அழைக்குதே
அன்பு தேவனே
என் அருகில் வாருமே

எம் கண்கள் உம்மைத் தேடுதே
கரங்கள் கூப்பி அழைக்குதே
அன்பு தேவனே
என் அருகில் வாருமே

என்னையும் தேற்றுவீர் தேற்றுவீர்
அன்பாய் என்னைத் தேற்றுவீர்

3.உந்தன் வார்த்தை இன்று தாருமே
என் வழியை நீர் காட்டுமே
எந்தன் தேவனே
என் அன்பு நண்பனே
உந்தன் வார்த்தை இன்று தாருமே
என் வழியை நீர் காட்டுமே
எந்தன் இயேசுவே
என் அன்பு நண்பனே

நித்தமும் நடத்துவீர் நடத்துவீர்
கனிவாய் என்னை நடத்துவீர்

ஆற்றவும் தேற்றவும்
உம்மைப் போல யாருண்டு
அன்பு காட்டவும் அரவணைக்கவும்
உம்மைத் தவிர எவருண்டு
நீரே எந்தன் தஞ்சம்
தயவு காட்டுமே
கிருபை தாருமே

எங்கே போவேன் நான்
எந்தன் இயேசுவே
யாரிடம் சொல்வேன் நான்
எந்தன் பாரத்தை